Visual identity

more »

Unique solutions

more »

Live support

more »

Our offices

லவ் பேர்ட்ஸ் வளர்ப்பு...




வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ்க்கு தனி இடம் உண்டு. கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும் சின்ன கூண்டு வைத்து இதில் இரண்டு ஜோடி பறவைகள் வரை வளர்க்கலாம். கீச் கீச் சத்தம் கேட்டாலே மனதில் மகிழ்ச்சி குடியேறும். இந்த பறவைகளை வளர்ப்பது தனி கலை. அவற்றை குழந்தைகள் போல பராமரித்தால் நம் கைகளில் வந்து விளையாடும்.

more »

புறா வளர்ப்பு...

Pigeon Farming

புறா வளர்ப்பு என்பது அலாதியான 

கலை. 

இன்றைக்கு கிராமங்களிலும், நகர்புறங்களில் மொட்டை மாடிகளிலும் கூடு அமைத்து புறாக்களை வளர்க்கின்றனர். அதற்கென்று தனியாக உணவிற்காக மெனக்கெட வேண்டாம் என்பதே இதில் உள்ள வசதி. கூட்டில் இருந்து தானாக பறந்து சென்று உணவு தேடிவிட்டு தானாக கூட்டினை வந்தடைந்து விடும் என்பதால் புறா வளர்ப்பது எளிதானது.

வழ வழப்பான புறாக்கூண்டு 

சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும்.

இதில்தான் புறாக்கள் வசிக்கும். வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும்.

வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும். இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும்.

தானிய உணவுகள் 

மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும்.

உலர்வான கூண்டு 

எப்பொழுதும் கூட்டைச் சுத்தமாக, உலர்வாக வைத்திருங்கள். நீர் வைக்கும் பாத்திரம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை நீரில் வைட்டமின் B மாத்திரை ஒன்று கலந்து விடலாம். அது கோழித்தீவனம் விற்குமிடத்தில் கிடைக்கும். கோழிகளை விட இவை சிறிய பறவைகள் என்பதால் அந்த அளவைவிட சிறிது குறைத்துக் கொடுக்கலாம். கோழிகளோடு சேர்த்து வளரவிடாதீர்கள். அவற்றிலிருந்து ஏதாவது தொற்றக்கூடும். ஒரு பறவையை கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்று காட்டுங்கள்,

தலை சுற்றல்நோய் 

மழைக்காலங்களில்தான் புறாவிற்கு தலை சுற்றல் நோய் வரும். எனவே இந்த நேரத்தில் கூண்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், புறா சாப்பிட்ட மீதி உணவை மீண்டும் வைக்கக் கூடாது. மழை காலத்தில் தண்ணீரில் மஞ்சள் கலந்து வைப்பது நோய் கிருமி தாக்குதலை தடுக்கும்.

வெயில் அவசியம் 

புறா மீது தினமும் வெயில் பட செய்ய வேண்டும். இதையும் மீறி தலை சுற்று நோய் வந்து விட்டால் பறவை நல மருத்துவரின் அறிவுரையோடு நிரோபியான் (NIROBIAN) மாத்திரை வாங்கி ஒரு வேளைக்கு 1/4 பகுதி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம் என்கின்றனர் பறவை வளர்ப்பாளர்கள். இரண்டு நாட்களில் சரியாகிவிடும். தலை சுற்று நோய் வந்த புறா வை கூண்டில் இருந்து தனியாக பிரித்து வைக்க வேண்டும். இல்லை எனில் இது மற்ற புறாவிற்கும் நோய் தாக்கும் அபாயம் உண்டு. முக்கியமாக எந்த காரணம் கொண்டும் இருட்டான அறையில் தலை சுற்று நோய் வந்த புறா வை அடைத்து வைக்க கூடாது.


கிடைக்குமிடம் :

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் தஞ்சை திருவையாறு சாலையில் கண்டியூர் சஹார ஃபார்ம்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு : 9443340341

more »

இறைச்சியின முயல் வளர்ப்பு...


இறைச்சியின முயல் வளர்ப்பு

இறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நமது நாட்டிலும், முயல் வளர்ப்பதற்கான சாத்தியமான அம்சங்கள் நிறைய உள்ளன. மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப இறைச்சி உற்பத்தியை பெருக்கிட முயல் வளர்ப்பு மிகவும் ஏற்ற பண்ணைத் தொழிலாகும். முயல் கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வளர்க்கலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் ஏன் பலரும் முயல் வளர்க்க முன்வருவதில்லை என்பதை ஆராய்ந்தால் கீழ்க்கண்ட காரணங்கள் தெரிகின்றன.

· முயல்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது.

· முயல் வளர்த்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும் என்ற தவறான கருத்து.

· முயலினை இறைச்சிக்காக வெட்ட அஞ்சுவது / பரிதாபப்படுவது.

· முயல் பண்ணைத் தொடங்கிட போதுமான உதவிகள் கிட்டாமை.

· விற்பனை வசதிகள் திறம்பட இல்லாத நிலை.

· மானியத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை.

மேற்கூறிய காரணங்கள் களையப்பட்டால் சிறப்பம்சங்கள் நிறைந்த முயல் வளர்ப்பு வெகு விரைவாக பிரபலம் அடையும்.

முயல் இனங்கள் மற்றும் சாதகமான சூழ்நிலை :

ஐம்பதிற்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லக்கூடிய இனங்கள் வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள். இவற்றில் அங்கோரா இன முயல்களை உயர்தர உரோமத்திற்காக குளிர்ந்த மற்றும் மலைப் பிரதேசங்களில் வளர்க்கலாம்.

இறைச்சி முயல்களை மலைப் பிரதேசங்களிலும், சமவெளிப் பகுதிகளிலும் வளர்க்கலாம். தட்பவெப்பநிலை 36 ஊ வரைக்கும் இருக்கலாம். ஈரப்பதம் காற்றில் 70 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த (15-20 C) மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர்க்கச் சிறந்தது.

முயல் இருப்பிடம் மற்றும் வளர்ப்பு :

முயல்களை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. (ஆழ்கூள முறையிலும் வளர்க்கலாம்). மூலதனம் குறைவான மரக்கூண்டுகளிலும் வளர்க்கலாம். வளர்ந்த ஆண் முயலுக்கு (1.5 x 1.5 x 1.5') அளவுள்ள கூண்டும், பெண் முயலுக்கு (2.0 x 2.5 x 3.0') அளவுள்ள கூண்டும் ஏற்றது. இதில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு சிறிய பாத்திரம் அல்லது கொள்கலன்களை கட்டிவிட வேண்டும். கூண்டுகளை தினந்தோறும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தீ உமிழி கொண்டு சுத்தம் செய்யலாம். முயல் சாணம் கூண்டுகளில் தங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முயல் மிகவும் சாதுவான பிராணியாதலால், பள்ளி சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் வளர்க்க ஏதுவானது. முயல் வளர்க்க ஆரம்பிப்போர் முதலில் ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் முயல்கள் கொண்ட சிறு குழுவாக ஆரம்பிக்கலாம். முயல் வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்த பின்னரே அதிக அளவில் முயல் வளர்க்க எண்ண வேண்டும். கொல்லைப் புறத்தில் வளர்க்க 1 ஆண் மற்றும் 3 பெண் முயல்கள் போதும். இதிலிருநது வாரந்தோறும் ஒரு கிலோ இறைச்சி கிடைக்கும். இது குடும்ப தேவைக்கு போதுமானது. கொல்லைப் புறத்தில் முயல் வளர்க்கும் சமையலறைக் கழிவுகள் மற்றும் பசுந்தீவனம் கொண்டே பராமரிக்கலாம்.

முயல் வளர்ப்பின் சிறப்பம்சம் :

பசுந்தீவனத்தை சிறந்ததொரு இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் வேறெதும் இல்லை. முயல் இறைச்சி மருத்துவ குணங்கள் கொண்டது. கொலஸ்ட்ரால் மிக மிகக் குறைவு. இருதய நோயாளிகளும், முதியோர்களும் ஏற்கக் கூடிய இறைச்சி. முயல்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் தேவையில்லை. குறைந்த சினைக்காலம், அதிக குட்டிகள் ஈனும் திறன், துரித வளர்ச்சி அதிக தீவன மாற்றுத்திறன் ஆகிய குணங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள். நிச்சயம் லாபகரமான பண்ணைத் தொழில். ஆரம்பத்தில் சிறிய அளவில் பண்ணை அமைத்து, நல்ல அனுபவம் பெற்ற பின்னர் பெரிய அளவில் தொடங்கலாம். ஒரு நபர் 500 முயல்கள் வரைக்கும் பராமரிக்க முடியும். முன்னேற்றம் தரும் சிறந்ததொரு பண்ணைத் தொழில் முயல் வளர்ப்பு.

கிடைக்குமிடம் :

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் தஞ்சை திருவையாறு சாலையில் கண்டியூர் சஹார ஃபார்ம்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு : 9443340341

வங்கியில் கடன் உதவி :

அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் முயல் வளர்க்க கடன் உதவி பெறலாம். கடன் பெறுவதற்கு முன், வளர்ப்பதற்கான செலவுகள் மற்றும் நிகர லாபம் அடங்கிய திட்டத்தை சமர்ப்பித்து கடன் பெறலாம். ஆயுள் காப்பீடு வசதியும் முயல்களுக்கு உள்ளது.
more »

தலச்சேரி ஆடு



  • 3 மாதத்திற்கு 20Kg வரை எடை அதிகரிக்கும்.
  • 5 முதல் 6 மாதத்திற்குள் இனப்பெருகத்திற்கு தயாராகும்.
  • 2 லிட்டர் வரை பால் கொடுக்கக்கூடியது.
  • 2முதல் 3குட்டி வரை ஈன்றெடுக்கும்.
  • அருகம்புல், CO3, CO4, குதிரை மசாலா,வேலி மசாலா போன்றவற்றை உட்கொள்ளும்.
  • மேலும் இது உங்கள் இடத்தில் வளரும் பசுமையான தழைகளை உட்கொள்ளும்.
  • CO3, CO4  ஆகியவை இதன் எடை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் உணவுகள்.
  • இது எல்லா ஊர்களின் சூழ்நிலைகளிலும் வாழும்,வளரும்.
  • இவைகளை உயரமான பட்டிகளில் அமைப்பது சிறந்தது.
  • தஞ்சாவூர் விலை உயிருடன் கூடிய எடை 310/Kg  (சுத்தமானது) பெண் ஆட்டிற்கு,  320/Kg (சுத்தமானது) ஆண் ஆட்டிற்கு.
  • மேலும், ஆடுகளின் டெலிவரிக்கு தேவையான வாகனங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.

கிடைக்குமிடம் :

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் தஞ்சை திருவையாறு சாலையில் கண்டியூர் சஹார ஃபார்ம்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு : 9443340341
more »